வெக்கமே இல்லாத உறவு…
பெற்றவளை பதினாறு வயதில் எட்ட வைத்துவிடுறோம்.
அக்கா தங்கச்சிகளை கட்டிக் கொடுத்ததற்கு அப்புறம் மறந்துவிடுகிறோம்.
பெற்ற பெண் வளர்ந்து மனுஷியான பின்,
வேற ஆளாக போய்விடுகிறாள்.
ஒரு ஆண்,
தன் மனைவியைதான்
சகல இடத்திலும் சந்தோஷப்படுத்தலாம்,
பேசலாம்,
சண்டையிடலாம்,
கொஞ்சலாம்,
அணைச்சுக்கலாம்,
அதட்டலாம்,
கவலைப்படலாம்,
கவலையை தீர்க்க திட்டம் போடலாம், புத்தி அலுத்த போது படுத்து உறங்கிக்கலாம்.
இளைப்பாறலாம்.
புருஷன் – பொண்டாட்டி உறவு. எப்பேர்பட்ட உறவு அது..?
“வெக்கமே இல்லாத உறவு…!””




