
தமிழ்நாடு அரசு, வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து 67 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தங்களுடைய பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரி படிப்புகளை முடிக்கும் நேரத்தில், அதனை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தும் வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டிய வேலைவாய்ப்பு பதிவை, தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது.
கடந்த மாதம், அக்டோபர் 31ம் தேதியின்படி 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18,48,279 பேரும், 19-30 வயது வரை உள்ள கல்லூரி மாணவர்கள் 28,09,415 பேரும் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 31 முதல் 45 வயது வரை அரசுப்பணி வேண்டி பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 18,30,076 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.