கேரளம் மாநிலம் வயநாட்டில் மேலும் ஒரு சிறுவனுக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோலியாடி மார் பேசிலியோஸ் ஏ.யு.பி. பள்ளியைச் சேர்ந்த மாணவருக்கு தற்போது ஷிகெல்லா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுவன் உள்பட அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், அறிகுறிகளுடன் வந்திருந்த மற்ற 14 பேர் பரிசோதனைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.




