0.024 பைசாவிற்காக சிறை சென்ற நபர் எங்கே நடந்தது தெரியுமா..?

உலகத்தில் அவ்வப்போது சில வினோதமான சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம் அப்படிப்பட்ட சில விஷயங்கள் இணையத்தில் வைரலாகுவது வழக்கம்தான். அந்த வகையில் தற்பொழுது வெறும் 24 பைசாவிற்காக ஒருவர் சிறைக்கு சென்றுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள புளாரிடா மாகாணத்தில் தான் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளாரிடா  மாகாணத்தில் சம்பர் கவுண்டி என்ற பகுதி உள்ளது. இந்த சம்பர்க் கவுண்டி பகுதியில் உள்ள வங்கியில் தனது கணக்கில் இருந்து பணம் எடுக்க மைக்கல் பிளமிங்(வயது 41 ) என்பவர் சென்றார். மைக்கேல் பிளமிங் பணம் எடுக்கும் படிவத்தை நிரப்பி அங்கிருந்த கவுண்டரில் இருந்து அதிகாரியிடம் அளித்துள்ளார். அந்த படிவத்தை கண்ட வங்கி அதிகாரி அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த படிவத்தில் மைக்கேல் பிரமிங் ஒரு சென்ட் பணத்தை தனது வங்கி கணக்கில் இருந்து எடுக்க வேண்டும் என எழுதி இருந்தார்.

இந்த தொகையின் மதிப்பு 0.024 பைசா என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு குறைந்த அளவு தொகையை எல்லாம் தர முடியாது என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதனால் காபமடைந்த பிளமிங்  “ நான் வேறு வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா..?” என்று மிரட்டலாக கேட்டுள்ளார். இதனால் பயந்து போன வங்கி அதிகாரி காவல்துறையில் தகவல் தெரிவித்தார்.

இந்த தகவல் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மைக்கேல் பிளமிங் அதிகாரியை மிரட்டுவது மற்றும் அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தது ஆகிய குற்றங்களின் கீழ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read Previous

தமிழகத்தை அதிர வைத்த சம்பவம்..!! மூதாட்டி உடலுக்கு இறுதி சடங்கு செய்த பெண்கள்..!!

Read Next

நரேந்திர மோடியின் ரஷ்ய வருகை மேற்கத்திய நாடுகளுக்கு வயித்தெரிச்சல் ரஷ்யா கருத்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular