+1, +2 ஆம் வகுப்பு மாணவ மாணவர்களுக்கான துணை பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு..!!

+1,+2 ஆம்வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது .தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ மாணவிகள் இந்த தேர்வினை எழுதியுள்ளனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியானது. இதில் 94.56% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று  தனது கல்லூரி படிப்பிற்கு அடுத்த காலடி எடுத்து வைத்துள்ளனர்.

தோல்வியடைந்த மாணவர்கள் மே 16 முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் மாணவர்கள் தங்கள் படித்த பள்ளிகளிலேயே விண்ணப்பிக்கலாம் எனவும் தனித்தேர்வர்கள் மாவட்ட இ சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்பொழுது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பன்னிரண்டாம் வகுப்பிற்கான துணைத்தேர்வுகள் ஜூன் மாதம் 24 ஆம் தேதி தொடங்கி ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 11ஆம் வகுப்பிற்கான துணைத்தேர்வுகள் ஜூலை 2-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி 1.15 மணி வரை நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Previous

பிளாக் டீ பிரியர்களா நீங்கள்..? பிளாக் டீ குடித்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா..? திடுக்கிடும் தகவல்..!!

Read Next

திருமண விழாவிற்கு சென்ற உறவினர்களுக்கு நேர்ந்த விபரீதம்..!! பரிதாபமாக பறிபோன 13 உயிர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular