1.30 லட்சம் மதிப்புள்ள கிளியை தேடிப்பிடித்த போலீஸ்..!!

ஹைதராபாத்தில் காணாமல் போன ரூ.1.30 லட்சம் மதிப்புள்ள ஆஸ்திரேலிய கிளியை போலீசார் மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர். நான்கு மாதங்களே ஆன காலா என்ற கிளி செப்டம்பர் 22ஆம் தேதி காணாமல் போனது பற்றி, அதன் உரிமையாளர் நரேந்திராச்சாரி போலீசில் புகாரளித்திருந்தார். அப்பகுதியிலுள்ள செல்லப்பிராணிகள் விற்பனையாளர்களிடம் கிளியின் படத்தை காட்டி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது எரகட்டா பகுதியிலுள்ள ஒருவருக்கு கிளி ரூ.30,000-க்கு விற்கப்பட்டது தெரியவந்தது. ஜூப்லி ஹில்ஸில் உள்ள செல்லப்பிராணிகள் கடையின் மேலாளர், கிளி இருக்கும் இடம் குறித்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். போலீசார் உடனடியாக கிளியை மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Read Previous

இன்றைய ராசிபலன் 04-10-2023..!!

Read Next

உலகக் கோப்பை அணியின் ஜெர்சி வெளியீடு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular