தமிழகத்தில் போக்குவரத்து கட்டுப்பாட்டை மீறி பொது மக்களை தொந்தரவு செய்த வகையிலும் போக்குவரத்திற்கான சரியான அடையாளச் சான்றுகள் இல்லாத காரணத்தினாலும் போக்குவரத்து கட்டுப்பாட்டை மீறி வாகன ஓட்டியவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது..
போக்குவரத்து விதிகளை மீறியதாக 1 லட்சத்து 82,375 பேரில் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை பரிந்துரை செய்துள்ளது, டிஜிபி அலுவலக செய்தி குறிப்பில் ஜூலை வரை விதிகளை மீறியதாக 76,15,713 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் மேலும் ஓட்டுநர் உரிமைகளை ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து 39 ஆயிரத்து 924 ஓட்டுநர் உரிமைகளை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது, இதனை தொடர்ந்து இனிவரும் காலங்களில் போக்குவரத்து விதிகளை மீறி எவரேனும் வாகனங்களை சாகச பயணத்திலோ அல்லது பொது மக்களை அச்சுறுத்தும் நிலையிலோ செயல்பட்டால் அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தமிழக அரசு மற்றும் தமிழக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது..!!




