
10 கிலோ வரை எடை குறைய உதவும் நீர்..!! எப்படி பயன்படுத்துவது தெரியுமா..??
இந்த நவீன காலகட்டத்தில் வாழ்க்கை முறை காரணமாகவும் லைஃப் ஸ்டைல் காரணமாகவும் ஆரோக்கியமான உணவுகளை தவிர்ப்பதன் காரணமாகவும் கிடைத்த உணவுகளை சாப்பிடுவதன் காரணமாகவும் உடல் எடை என்பது அதிகரித்து வருகிறது. உடல் எடை அதிகரிப்பதற்கு உணவு பழக்க வழக்கமும் ஒரு காரணமாகவும் மற்றும் நேரத்திற்கு தூங்காமல் இரவில் நீண்ட நேரம் முடித்திருப்பது கூட ஒரு காரணமாக அமையலாம். உடல் எடை பிரச்சனையால் இந்த நவீன காலகட்டத்தில் அவதிப்படுபவர்கள் தான் அதிகம். இந்நிலையில் 10 கிலோ வரை எடையை குறைக்கக்கூடிய சக்தி இந்த தண்ணீருக்கு இருக்கிறது அது என்ன தண்ணீர் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
10 கிலோ அளவு எடையை குறைக்கக்கூடிய சக்தி சீரகத் தண்ணீருக்கு தான் இருக்கிறது. காலை எழுந்தவுடன் சீராக நீரை குடிப்பதால் பல்வேறு பயன்கள் இருக்கிறது. இருப்பினும் இரவு நேரத்தில் குடிப்பது தான் அதிக பயன்களைத் தரும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். காலையில் சீரகத் தண்ணீர் குடிக்கலாம் மற்றும் இரவிலும் சீரக தண்ணீர் குடிப்பதன் மூலமாக உடல் எடை வேகமாக குறைய உதவும் வளர்ச்சிதை மாற்ற விதத்தை அதிகரிக்க சீரகம் அதிக அளவு செயல்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.