ஜியோ நிறுவனத்தில் இருந்து விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளிக்கு சிறப்பு ஆப்பர்..
ஜியோ நிறுவனம் விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு சலுகையை அறிவிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளது, இந்த வகையில் இந்த ஆண்டு ஜியோ பயன் அவர்களுக்கு 100 ஜிபி இலவச க்ளவுட் சேமிப்பு வழங்கி இருக்கிறது, google ட்ரைவு போல ஜியோ ஸ்டோரேஜிலும் தங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்களை 100 ஜிபி வரை இலவசமாக சேமிக்க முடியும் என்றும் இந்த திட்டம் வருகிற தீபாவளி க்கு அறிமுகப்படுத்தப்படுகிறது என்றும் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார், google நிறுவனம் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்க்கு மாதம் 130 ரூபாயும், ஆப்பிள் நிறுவனம் 50 ஜிபி ஸ்டோரேஜ் க்கு மாதம் 75 ரூபாயும் வசூலித்து வருகிறது, ஜியோ நிறுவனத்தின் அதிரடி ஆஃபர் ஜியோ பயனர்களுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தி தந்துள்ளது இதனால் ஜியோ பயன் அவர்கள் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்..!!