100 கோடியை தாண்டிய ராயன்..!! 8 நாட்களில் எட்டிய உலக சாதனை..!!

ராயன் படத்திற்கு முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தனுஷின் 50வது படமான ராயனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி , வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக தனுஷ் நடிக்கிறார். மாபெரும் எதிர்பார்ப்பில் ஜூலை 26ம் தேதி வெளிவந்த இப்படம் உலகளவில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி வெளியானதில் இருந்தே உலகளவில் வசூலில் மாஸ் காட்டி வந்த ராயன் படம் 7 நாட்களில் ரூ. 102 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது. இதன்மூலம் வேகமாக ரூ. 100 கோடி வசூல் செய்த தனுஷின் திரைப்படம் என்ற சாதனையையும் ராயன் படைத்துள்ளது.

Read Previous

சிறுநீரக கல்லை கரைய வைக்கும் ஓர் அற்புதமான கை வைத்தியம்..!!

Read Next

கஷ்டங்களைப் போக்கும் கால பைரவர் வழிபாடு..!! பூஜை செய்ய உகந்த நேரமும் முறையும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular