கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் பொருட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது . மேலும், இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாளர்கள் சரியாக வேலைக்கு வராமல் சம்பளம் பெற்றுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது போலியான வேலை அட்டை, பணியாற்ற விருப்பமின்மை, கிராம பஞ்சாயத்துக்கு குடும்பம் நிரந்தரமாக குடியேற்றம், பயனாளிகளின் இறப்பு போன்ற காரணங்களால் நாடு முழுவதும் 23 லட்சத்து 64 ஆயிரத்து 27 வேலை அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 6, 19, 310, 100 நாள் வேலை அட்டைகள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




