
திருமங்கலம்: திருமங்கலம் மத்திய அரசின் புதிய உத்தரவால் 100 நாள் வேலை வாய்ப்பினை இழந்தவர்கள் தங்களுக்கு பணி வழங்க கோரி 50க்கும் மேற்பட்டோர் திருமங்கலம் யூனியன் அலுவலகத்தில் முற்றுகையிட்டு தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதி கூறியதைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.