
10,000 இந்தியர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு..!! வெளியான தகவல்..!!
10,000 இந்தியர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருந்து 10,000 கட்டுமானத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட இஸ்ரேலிய அதிகாரிகள் குழு இந்தியா வருகை தரவுள்ளது. இஸ்ரேலில் வேளாண், மருத்துவம் சார்ந்த பணிகளுக்காக கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பலர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.