11 வயது சிறுமி பலாத்காரம்..!! இணையத்தில் வெளியான வீடியோ..!!
உத்திரப் பிரதேசம் பல்லியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். அதனை நண்பர்கள் மூலம் வீடியோவும் எடுத்துள்ளார். இந்த சம்பவம் கடந்த மாதம் 6ஆம் தேதி நடந்துள்ளது. தற்போது, அந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து போலீசில் புகார் அளித்த நிலையில் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.