11 வருஷம் வாழ்ந்தது போதும்…!! மனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் ஜி.வி பிரகாஷ்..!!

தனது மனைவியை விவாகரத்து செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகரும் இசையமைப்பாளர் வருமான ஜிவி பிரகாஷ்.

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர ஜோடிகளில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ் சைந்தவி ஜோடி காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் 11 வருடங்கள் ஒன்றாக வாழ்வதை தொடர்ந்து தற்பொழுது விவாகரத்து செய்ததாக அதிகாரப்பூர்வமாக தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.

இருவரும் விரைவில் விவாகரத்து செய்யப்போவதாக சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாகவே செய்திகள் வெளி வர தொடங்கியது. தற்பொழுது இதனை உறுதி செய்யும் விதமாக ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் அவர்களது விவாகரத்து உறுதியானது உறுதியான செய்தியை பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “நானும் சைந்தவியும் 11 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிய முடிவு செய்துள்ளோம். ஒருவர் மீது ஒருவர் நாங்கள் வைத்திருக்கும் பரஸ்பரம் மரியாதை அப்படியே நீடிக்கும். மிகவும் தனிப்பட்ட இந்த மாற்றத்தின் போது எங்களுடைய தனி உரிமை மதித்து புரிந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். இது எங்கள் இருவருக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த கடினமான காலகட்டத்தில் உங்களுடைய புரிதலும், ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி”, எனக் கூறி  உள்ளார்.

ஜிவி பிரகாஷ் சைந்தவி இருவரும் இணைந்து பல்வேறு வெற்றி பாடல்களை ஒன்றாக பாடியுள்ளனர், தற்போது இவர்களது விவாகரத்து அவர்களது ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையில் பெரிய அதிர்ச்சியிணை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு நான்கு வயதில் அன்வி என்ற மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

திடீரென பெய்த தீ மழை – உடலில் தீப்பிடித்து கருகிய மக்கள்..!! பதறவைக்கும் சம்பவம்.!!

Read Next

மனைவி மேல் இவ்வுளவு பாசமா..? இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவகாரத்தால் வருத்தத்தில் நெட்டிசன்கள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular