Oplus_131072
11 வாரங்களில் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் அற்புத மலர் 🙏
சிவபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கு செண்பகப் பூவை சாத்தி வழிபட்டு வந்தால் தொழிலில், வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை நாம் அடையலாம்.
சிவபெருமானுக்கு மிகவும் உகந்த இந்த செண்பகப்பூவால் அர்ச்சனை செய்து வர, 11 வாரங்களில் அதற்கான பலனை பெறலாம். சிவபெருமானுக்கு எந்த தினத்திலும் இந்தப் பூவை வைத்து பூஜை செய்யலாம்.
அத்தோடு, நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருப்பவர்கள், குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் குழந்தை வரம் வேண்டி இந்த செண்பகப் பூவினால் முருகப்பெருமானுக்கு 11 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்து கொண்டால், குழந்தை பாக்கியம் நிச்சயம் கிட்டும் என்பது நம்பிக்கை ஆகும்.
தொழில், குழந்தை பாக்கியம் மாத்திரமன்றி உங்கள் மனதில் இருக்கும் எந்த வேண்டுதல்களை வைத்து வேண்டினாலும் அதற்கான பலன் கிட்டும்.




