மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பை வெளியிட்டது. இதில் Prosthetic Craftsman பணிக்கென காலியாக இருக்கும் 36 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
காலிப்பணியிடங்கள்:
Prosthetic Craftsman பணி-36.
கல்வி தகுதி:
12ம் வகுப்பு/ டிப்ளமோ தேர்ச்சி.
வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
ரூ.19,500/- முதல் ரூ.71,900/- ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
Tamil Language Eligibility Test / Computer Based Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.04.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




