நமது வாழ்வில் பொது தேர்வு ஒரு முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதிலும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நமது வாழ்வை தீர்மானிக்கும் ஒன்றாகும். இந்த ஒரு தேர்வில் கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்கள் தங்களின் முழு திறமையை காட்டுவார்கள்.
அப்படி 2025 காண பொதுத்தேர்வு சில நாட்களுக்கு முன்பு முடிவு பெற்றது. இந்த தேர்வுக்கான விடை திருத்தும் வேலை எப்போது ஆரம்பிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறனர். இந்த 12 ஆம் வகுப்பு தேர்வில் மொத்தம் 8 லட்ச மாணவர்கள் எழுதியதாக கூறப்படுகிறது.
இந்த எட்டு லட்ச மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. இந்த வேலைக்கு தமிழக முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விடைத்தாள் திருத்த 46 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் விடை திருத்தும் பணி வரும் 17ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் ரிசல்ட் வரும் மே ஒன்பதாம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




