தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கன மழை வெளுத்து வாங்கியுள்ளது..
தமிழகத்தில் ஒரு சில நாட்களாக வங்க கடலோர காற்றழுத்த தாழ்வின் காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு மழை இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது, திருவாரூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், கடலூர், கோவை, பெரம்பலூர், நாகை, நாமக்கல், விருதுநகர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குவதால் சாலையில் வெள்ளநீர் பெருக எடுத்து ஓடுகிறது சாலைகள் அதிகளவில் தண்ணீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர், இதனை தொடர்ந்து ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது, மேலும் ஒரு சில நாட்களுக்கு மழை இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது, மேலும் கடலோரப் பகுதியில் இருக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவித்துள்ளது..!!