14 மாவட்டங்களில் வெளுத்தது வாங்கும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் இன்று தென் மாவட்டங்களில் கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது.

பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு மாலை முதல் காலை வேலை கடந்தும் கனமழை தொடர்ந்து வருகிறது, அடுத்த ஐந்து நாட்களுக்கும் தமிழ்நாட்டில் பரவலான இடங்களில் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டு உள்ளது, இதனால் பேரிடர் மீட்பு படையினர் எந்நேரமும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று இரவு 7 மணியளவில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கதாகவும் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

Read Previous

காவல் தெய்வம் சுடலைமாடனுக்கு பெயர் வந்தது எப்படி..? ஆன்மீக நண்பர்களே தெரிஞ்சிக்கோங்க.!!

Read Next

#Breaking: மதுரை, தேனி உட்பட 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular