140 கோடி வசூல்..!! ராயன் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்த தனுஷ்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த பாடகர் மற்றும் பாடல் ஆசிரியர் என்ற பெயர்களையும் பெற்றுள்ளார்.

அதே சமயம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராகவும் உருவெடுத்தார். இதனைத் தொடர்ந்து 7 வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய 50வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி அந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்த நிலையில் படத்தில் தனுஷ் தவிர எஸ் கே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக்கிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

அது மட்டுமல்லாமல் இந்த படம் குறுகிய நாட்களிலேயே 100 கோடி வசூலை கடந்து சுமார் 140 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இனிவரும் நாட்களிலும் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ராயன் திரைப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் தனுஷ் படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Read Previous

பற்றி எரிந்த கார்கள்..!! மின்சாரப் பெட்டி வெடித்து விபத்து..!!

Read Next

மத்திய அரசு வேலை..!! 17,727 பணியிடங்கள்..!! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular