அண்ணா பல்கலைக்கழகத்தில் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கியுள்ளது, 15 ஆண்டு காலமாக அரியர்ஸ் வைத்து தேர்வு எழுதாமல் இருந்தவர்கள் மீண்டும் தேர்வு எழுத சிறந்த வாய்ப்பாக அமைத்து தந்துள்ளது..
அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து அரியர் வைத்த மாணவர்களுக்கு மீண்டும் அரியர் தேர்வு எழுத வாய்ப்பளித்துள்ளது, ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 18 வரை அரியர் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது, அண்ணா பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகளில் அரியர்ஸ் தேர்வு எழுதாதவர்களின் டிகிரி கேன்சல் ஆகிவிடும் அப்படி இருக்கும் பட்சத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு அரியர்ஸ் வைத்த மாணவர்கள் மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுக் கொள்ளுங்கள் என்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர்..!!