15 நாட்களில் 10 சம்பவங்கள் பீகார் அரசின் அடுத்த நடவடிக்கை என்ன..? மக்கள் குற்றச்சாட்டு..!!

சமீப காலமாகவே பீகாரில் பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுந்து வருகின்றது. இவ்வாறு இருக்கையில் இன்று மற்றொரு பாலமும் இடிந்து விழுந்ததில் கடந்த 15 நாட்களில் மட்டும் பத்து பாலங்கள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் பீகார் சரண் மாவட்டத்தில் மட்டும் இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் நிர்வாகத்தால் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலங்கள் இடிந்து விழுந்ததில் யாருக்கும் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று சரண் மாவட்டத்தில் இரண்டு சிறிய பாலங்கள் இடிந்து விழுந்தது. கடந்த 16 நாட்களில் பீகாரில் மதுபானி, ஆராரியா சிவான் ,மற்றும் கிழக்கு சாம்பிராண் ஆகிய மாவட்டங்களில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பாலங்கள் உட்பட 10 பாலங்கள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது .

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த பீகார் அரசு உயர் மட்ட குழுவை அமைத்துள்ளது. பராமரிப்பு, தர மற்ற கட்டுமானம் போன்றவற்ற காரணங்களால் இந்த பத்து பாலங்கள் இடிந்து விழுந்ததாக மாநில பொதுப்பணித்துறை மீது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Read Previous

தொட்டதெல்லாம் வெற்றி பெறும் தேய்பிறை சஷ்டி வழிபாடு..!!

Read Next

நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!! காரணம் இதுவா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular