
டெல்லியில் உள்ள அலிப்பூர் பகுதியில் 15 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதிய விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (பிப்.,22) காலையில் முகமெல்பூரில் உள்ள பிர்னி சாலையில், 15 வயது சிறுவன், தனது அண்ணனின் காரை ஓட்டிச் சென்றுள்ளார். எதிர்பாராதவிதமாக அந்த கார் குழந்தை மீது மோதியது. இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தது. தொடர்ந்து, 15 வயது சிறுவன் மற்றும் அவரது அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.