15 வயது மகளை 8 மாத கர்ப்பமாக்கிய தந்தை..!! நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு பகவதி நகரில் வசித்து வருபவர் வெள்ளையன் (வயது 48). இவரின் மனைவி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை இது உள்ளார். அதன் பின் வெள்ளையன் இரண்டாவதாக பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

அந்த பெண்மணி முதல் திருமணத்தில் நான்கு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் என ஏழு குழந்தைகள் இருந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் வனக்காப்பாளராக வேலை பார்த்து வந்த வெள்ளையன் ஓராண்டாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். பெண்ணின் நாலு மகள்களில்  15 வயதுடைய சிறுமிக்கு உடல்நலம் சரியில்லை என திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமி எட்டு மாத கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் குழந்தை நலத் துறையினர், காவல் துறையினருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். விசாரணையில் சிறுமியின் வளர்ப்பு தந்தையார் வெள்ளையன் சிறுமியை பலாத்காரம் செய்தது அம்பலமானது. வெள்ளையனுக்கு எதிராக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த திருவில்லிபுத்தூர் மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு ஸ்ரீவி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது வழக்கின் இறுதி தீர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 20 ஆண்டு சிறை  தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  இந்த தீர்ப்பை நீதிபதி பகவதி அம்மாள் வழங்கியுள்ளார்.

Read Previous

பேருந்தில் சொந்த ஊருக்கு சென்ற பெண் சடலமாக மீட்பு..!! என்னதான் நடந்தது..? பகீர் சம்பவம்..!!

Read Next

கிரேன் சக்கரம் ஏறி-இறங்கி பயங்கர விபத்து..!! விசிக மகளிரணி செயலாளர் உடல் நசுங்கி பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular