
Maan Karate Success Meet with Sivakarthikeyan, Hansika Motwani
இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், அதிதி சங்கர், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாவீரன். கடந்த ஜூலை 14ஆம் தேதி வெளியான இந்த படம் நல்ல மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அது மட்டுமல்லாமல், மாவீரன் திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், இந்த படத்தில் நான் முதன் முதலில் நன்றாக நடித்துள்ளதாக பலர் கூறினர்.
அது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். படத்தைப் பார்த்து பாராட்டிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் சேதுபதி இந்த படத்தில் குரல் கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே போட்டி இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. நான் விஜய் சேதுபதி உடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன். விரைவில் அது வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.