
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 19-ம் தேதி மெய்தி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த வன்முறை தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், மத்திய, மாநில அரசுகள் மீது உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி இன்று கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார். அதன்படி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அதிக தாமதம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் எந்த சட்ட ஒழுங்கும் இல்லை மணிப்பூர் காவல்துறையினர் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.