
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, சென்னை, திருவள்ளூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.