
சென்னை திருவொற்றியூரை சார்ந்த மளிகை கடைக்காரர் ஒருவர் பதினாறு வயதுடைய சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டுள்ள விவகாரத்தில் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூரில் செயல்பட்டு வரும் மளிகை கடை ஒன்றில் நாகர்கோவிலில் சார்ந்த மதன்ராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் 16 வயதுடைய சிறுமிக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது, இந்த காதலுக்கு சிறுமியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 14ஆம் தேதி மதன்ராஜ் அந்த சிறுமியை தனது சொந்த ஊருக்கு கடத்தி சென்று பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார், இது தொடர்பாக சிறுமியின் தந்தை திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்,அந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் மதன் ராஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர், மேலும் பள்ளி மாணவி கடத்தி சென்று திருமணம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.