சொத்தை பல் வலியால் பெரும் அவதியா..? இந்த கீரையை இப்படி பயன்படுத்துங்க..!!

நம்மில் பெரும்பாலானால் சொத்தை பல் வலியால் அவதிப்படுவோம், இதற்கு ஒரு அற்புதம் மருந்து என்றால் அது குப்பைமேனி கீரைதான். குப்பைமேனி கீரை குப்பை மேடுகளில் கிடைக்கும், இந்த கீரையை பலவிதமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம், குப்பைமேனி கீரை காயகல்ப மூலிகை ஆகும்.

இந்த குப்பைமேனி கீரையை கலைச்செடியாக நினைத்து பலரும் பிடுங்கி எறிந்து விடுவார்கள் .ஆனால் இந்த குப்பைமேனி கீரையின் அனைத்து பாகங்களும் ஒவ்வொரு விதமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது. இந்த குப்பைமேனி கீரையை பல் வலி உட்பட எந்த எந்த நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம் என்பது குறித்து செய்தி குறிப்பில் காணலாம்.

  • குப்பைமேனி கீரையின் சாறு பிழிந்து குடித்தால் சளி பிடித்திருந்தால் அடியோடு குணமடையும் .மேலும் இருமல், தொண்டை கட்டுதல் போன்ற நோய்கள் இதிலிருந்து விடுபடலாம்.
  • குப்பைமேனி கீரையின் சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் சூடும் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும்.
  • குப்பைமேனி இலையின் சாறு பிழிந்து ஒரு ஸ்பூன் அளவு வெந்நீர் கலந்து குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.வயிற்று புழுக்களை ஒழிக்க நாம் குப்பைமேனி இலையை பொடியாகவும் வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
  • குப்பைமேனி இலையை இடித்து சாறு பிழிந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதேபோல குப்பைமேனி கீரை சைனஸ் என்ற நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
  • சொத்தைப்பல் வலியால் அவதிப்படுபவர்கள் இரண்டு அல்லது மூன்று குப்பைமேனி இலையை எடுத்து சுத்தம் செய்து அதை நன்கு நசுக்கி வலி உள்ள சொத்தைப்பல் மீது வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் சொத்தை பல்லில் உள்ள கிருமிகள் வெளியேறி வழி குறைந்துவிடும்.
  • குப்பைமேனி கீரை இலைகளுடன் மஞ்சள் மற்றும் கல்லுப்பு சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு, படை அரிப்பு உள்ள இடங்களில் வைத்து கழுவி வந்தால் அனைத்து வகையான சரும பிரச்சனைகளும் நீங்கும்.
  • உடல் வலியால் அவதிப்படுபவர்கள் அனைவரும் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து அதோடு நல்லெண்ணெய் சேர்த்து தேய்க்க உடல் வலி சரியாகும்.
  • மூட்டு வலி உள்ளவர்கள் அனைவரும் குப்பைமேனி இலையின் சாரெடுத்து அதனுடன் சுண்ணாம்பு கலந்து மூட்டுகளில் தேத்து வந்தால் மூட்டு வலி குணமடையும்.
  • தேள், பூரான் போன்ற விஷ பூச்சிகள் கடித்துவிட்டால் குப்பைமேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து கடித்த இடத்தில் தேத்து வந்தால் நல்லதொரு தீர்வு கிடைக்கும்.

Read Previous

கருப்பு மிளகை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!!

Read Next

உங்கள் சருமத்தின் அழகை மேம்படுத்த வேண்டுமா..? இந்த ஜூஸை குடித்தால் போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular