
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் 24 வயதாகிய இளம் பெண்ணிற்கும் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, அந்தப் பெண் அடிக்கடி இந்த மாணவனை அழைத்து இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ள நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த மாணவனிடம் இளம்பெண் கேட்டுள்ளார். இதற்கு அந்த மாணவன் முடியாது என மறுத்துள்ளார்.
இந்நிலையில், தகவல் அறிந்த மாணவனின் பெற்றோர் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் இளம்பெண் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.