கடந்த சில தினங்களாகவே கள்ளக்குறிச்சியின் கள்ள சாராய விவகாரம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அரசுக்கு புகார் அளித்தும் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்..? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மேலும் கடந்த ஆண்டு மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலியான சம்பவத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து வருகின்ற 26 ஆம் தேதிக்குள் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அதிமுக வழக்கறிஞர் இன்பத்துறை கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் மரணத்தை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கள்ளக்குறிச்சி கள்ளச்சார விவகாரத்தில் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தோல்வியை தழுவியுள்ளது என்பதே உண்மை, 50-க்கும் மேற்பட்டோர் இதுவரை பரிதாபாய் பலியாகினர். மேலும் சிகிச்சை பெறுபவர்களில் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ள காரணத்தால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
இதே போல் கடந்த ஆண்டு மரக்காணத்தில் இதேபோல கள்ளச்சாராயம் அருந்தி 30-கும் மேல் அதிகமானோர் பலியாகினார். அந்த சம்பவத்தை தொடர்ந்து தற்பொழுது கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கள்ளச்சாராயம் விற்பனை குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தும் தமிழக அரசு தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கள்ளக்குறிச்சி விவகாரத்தை பொருத்தவரை புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் கொண்டுவரப்பட்டதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆஜரான தலைமை வழக்கறிஞர் வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்ட விசாரணை தொடங்கியுள்ளது. மரக்காணத்தில் 14 பேர் கள்ளச்சாராயத்தால் அதில் 21 பேர் கைது செய்யப்பட்டு எட்டு பேர் மீது குண்டச்சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 16 காவல் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறி உள்ளார்.
இதனை தொடர்ந்து நீதிபதி மரக்காணம் சம்பவத்தை தொடர்ந்து அரசின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு வந்த பிறகும் கடந்த ஓராண்டாக தமிழக அரசின் அருகில் உள்ளது. எனவே இந்த சம்பவத்திற்கு முன்பாக ஊடகங்களில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருவதாக செய்திகள் உள்ளது. அப்போது மாவட்ட நிர்வாக காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது. அப்போது அரசு என்ன நடவடிக்கை எடுத்திருந்தால் மீண்டும் அதே போல் ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை எனவே கள்ளக்குறிச்சி மரக்காணம் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவிட்டு வழக்கு விசாரணை வருகின்ற 26 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.