1752 அரசு மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பல் – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை..!!

தமிழகத்தில் மருத்துவத்துறையில் காலியாக உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.

காலி பணியிடங்கள் நிரப்பல்:

2023 ஏப்ரல் மாதம் மருத்துவ பணியாளர்களுக்கான தேர்வுகளானது TNMRB வாரியத்தின் வாயிலாக நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இத்தேர்வுகளின் வாயிலாக மொத்தம் 1700 க்கும் மேற்பட்ட மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அரசு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இது தொடர்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதன்படி ஐந்தாண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பணிக்கான தேர்வுகள் நடந்து முடிந்து எட்டு மாதங்கள் ஆகியும் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதனால் தேர்வர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் தமிழக அரசு மருத்துவமனைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி பொதுமக்களுக்கான சேவைகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே தமிழக அரசு ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த மருத்துவ பணியாளர்கள் தேர்வுக்கான 1752 காலியிடங்களுக்கான முடிவுகளை உடனடியாக வெளியிட்டு அரசு மருத்துவர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாக தெரிவித்துள்ளார்.

Read Previous

ஓரினசேர்கையாளர்களுக்கு ஆதரவாக 2 கன்னி மேரி சிலைகள்..!!

Read Next

பெண்கள் 6ம் வகுப்பிற்கு மேல் படிக்க தடை – அரசின் அதிரடி உத்தரவு..!! கதறும் மாணவிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular