ஐடி துறைகளில் தற்போது மந்த நிலை நிலவி வருவதால் கடந்த சில மாதங்களாகவே அதிகளவிலான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். இதனால் எந்த நேரத்திலும் பணிநீக்கம் செய்து விடுவார்கள் என ஐடி ஊழியர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், ஐடி சேவை நிறுவனங்களின் மார்ச் மாத காலாண்டு முடிவுகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் பிரபல IT நிறுவனமான இன்டெல் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தங்கள் நிறுவனத்தின் ஊழியர்களை தொடர்ந்து பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது தங்கள் நிறுவனத்திலிருந்து 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது . கடந்த ஆண்டு 1,24,800 ஊழியர்களை இந்நிறுவனம் பணி நீக்கம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.




