தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Group 4 தேர்வு குறித்த ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியானவர்களாகவும் 37 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். தகுதியானவர்கள் விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
சமீபத்தில் 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வானது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இத்தேர்வில் 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பிருந்த நிலையில்,15 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் தேர்வெழுதி உள்ளனர். தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி TNPSC குரூப் 4 பணியிடங்கள் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 ஆண்டுகளில் 75,000 பேர் அரசு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




