2 கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து..!! பெண், குழந்தைகள் உட்பட 5 பேர் பலி.!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாராயணன் பேட்டை மாவட்டத்தில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலத்தை சார்ந்த இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளானதும் அதில் பயணித்த ஐந்து பேர் உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஐந்து பேரில் 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் உயிரிழந்தனர், விபத்து குறித்து தகவல் அறிந்த நாராயணன் பேட்டை காவல் துறையினர் உயிர் இழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து உயிரிழந்தவர்கள் எங்கிருந்து வந்தார்கள்..? அவர்கள் யார்..? எங்கு சென்று கொண்டு இருந்தார்கள்..? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

சிறுமியை வீடுபுகுந்து பலாத்காரம் செய்த காமுகன்..!! மனமுடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலை முயற்சி.!!

Read Next

புதிய சாதனை படைத்த தமிழ் சினிமா..!! ஒரே ஆண்டில் இத்தனை நாறு படங்கள் ரிலீஸ்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular