2 கோடி பேருக்கு இலவச வீடுகள் – நிதியமைச்சர் அறிவிப்பு..!!

மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது. 2027-ல் இந்தியா வளர்ந்த நாடு என்கிற கனவினை எட்டும். 4 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும். வட கிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும். சூரிய மின் திட்டத்தின் மூலம் 1 கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு என்பதே நமது அடுத்த இலக்கு. மீன் வளத்துறையில் புதிதாக 55 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன’ என்றார்.

Read Previous

50 ஆண்டுகளுக்கு வட்டி இல்லாத கடன் திட்டம் அறிவிப்பு..!!

Read Next

பட்ஜெட் 2024: வருமான வரி ரீஃபண்ட் 93 நாட்களுக்கு பதில் 10 நாட்களில்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular