2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியீடு..!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 2 சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை  செய்த வழக்கில் 3 சிறார்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி தனது தாத்தா, பாட்டி வீட்டில் வளர்ந்து வந்துள்ளார்.  கடந்த சில நாட்களாக சிறுமியிடம் சில மாறுதல் தோன்றியுள்ளன. இதனை அறிந்த உறவினர்கள் அந்த சிறுமியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்து உள்ளனர். அந்த பரிசோதனையில் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த சிறுமியிடம் விசாரித்ததில், 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் சிறுமியின் தோழியிடமும் பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

இது குறித்து அச்சிறுமியின் உறவினர்கள் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்  பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஜெய காளீஸ்வரன் (19), மதன்குமார் (19), பரணி குமார் (21), யுவபிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவா பாரதி (22) மற்றும் 3 சிறுவர்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த குற்றவாளிகளின் 6 பேரின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உடுமலை ஏடிஎஸ்பி அலுவலகத்தின் முன்பு திரண்டனர்.சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்த உரிய விசாரணை நடத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் உரிய விசாரணைக்கு பின்னரே சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ததாக தெரிவித்தனர். மேலும் காவல் துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமாறும் கேட்டுக்   கொண்டதின் போரில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

மனைவியுடன் கள்ளத்தொடர்பு..!! நண்பன் கொலை..!!

Read Next

காவல் தெய்வம் சுடலைமாடனுக்கு பெயர் வந்தது எப்படி..? ஆன்மீக நண்பர்களே தெரிஞ்சிக்கோங்க.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular