தமிழ் சினிமாவில் ‘‘மின்சார கனவு” என்கின்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை காஜோல். இத்திரைப்படத்தில் பிரபுதேவா மற்றும் அரவிந்த் சாமியுடன் இணைந்து அவர் நடித்துள்ளார்.
தொடர்ந்து நடிகை காஜோல் தமிழில் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளிவந்த “பட்டதாரி 2” திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதுங பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாய் வளம் வந்தவர் 1999 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். அவர் தற்பொழுது படங்கள் வெப் சிரீஸ் என பிசியாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் காஜோல் கூறியது “திருமணத்திற்கு முன்பு அஜய் தேவகனுக்கு ஒரு கண்டிஷன் போட்டிருந்தேன். இரண்டு மாதங்கள் ஹனிமூனுக்காக வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் அதற்கு ஓகே என்றால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதிப்பேன் என்று கூறினேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். திருமணத்திற்கு பின் தேன் நிலவுக்காக ஒவ்வொரு நாடாக சென்ற நிலையில் அஜய் தேவ்கானால் முடியவில்லை .உடம்பு சரியில்லாமல் சென்றது பின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அடம் பிடித்து அங்கிருந்து கிளம்பிவிட்டார்”, என்று காஜோல் கூறி உள்ளார்.