2 ரவுடிகள் என்கவுன்டரில் கொலை – காவல் ஆணையர் விளக்கம்..!!

சென்னை சோழவரம் அருகே இரண்டு ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சோழாவரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் முத்துசரவணன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் முத்து சரவணனை பிடிக்க முயன்றபோது காவலர்களை தாக்கியதால் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். இதனையடுத்து, சோழவரம் அருகே 2 ரவுடிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆவடி காவல் ஆணையர் சங்கர் விளக்கமளித்துள்ளார். அதன்படி, “ரவுடிகள் துப்பாக்கிகளால் காவல்துறையினரை நோக்கி சுட்டனர். காவல்துறையினர் தற்காப்புக்காக சுட்டதில் ரவுடிகள் இருவரும் குண்டு பாய்ந்து இறந்தனர்” என தெரிவித்துள்ளார்.

Read Previous

மகாபலிபுரம் கலங்கரை விளக்கம் மூடல்..!!

Read Next

ஹெச். ராஜா மருத்துவமனையில் அனுமதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular