
பாரீஸ் நகரில் நடைபெற்ற சிறந்த ஃபிஃபா கால்பந்து விருது வழங்கும் விழாவில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு, ஆடவருக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருது வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 2021 முதல் டிசம்பர் 2022 வரை ஆண்கள் கால்பந்தில் அவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. கடந்தாண்டு டிசம்பரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ஆம் ஆண்டின் கால்பந்து உலகக் கோப்பையை வென்றது. அந்த தொடரின் பைனலில் கலக்கிய பிரான்சின் கிலியன் எம்பாப்பேவும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.