2024 ஜனவரி மாதம் வேலைவாய்ப்பு கண்காட்சி – அரசின் ஏற்பாடுகள்..!!

கர்நாடகா மாநிலத்தில் 2024 ஜனவரி மாதத்தில் வேலைவாய்ப்பு கண்காட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு கண்காட்சி:

கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா அவர்கள் மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலான பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக மாநில இளைஞர்கள் வேலை வாய்ப்பு கொள்கை தேவைப்படுவதாக கூறியுள்ளார். இந்த கொள்கை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் 2024 ஜனவரி கடைசி வாரத்தில் பெங்களூரு நகரத்தில் வேலைவாய்ப்பு கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு கண்காட்சி குழுவினை திறம்பட நடத்துவதற்காக அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் கவனிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் வேலை வாய்ப்பு வழங்க உள்ள நிறுவனங்கள் மற்றும் வேலை நாடுநர்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் தொலைநோக்கு திட்டங்களை வகுப்பதற்கான பரிந்துரைகளை அமைச்சர்கள் குழு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை சோதனை செய்வதற்கும் பரிந்துரைத்துள்ளார். முதல்வர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர், திறன் மேம்பாடு மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர்கள் போன்ற முக்கிய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Read Previous

இன்றைய தங்கள் விலை நிலவரம்..!! தாய்மார்கள் ஹாப்பி..!!

Read Next

60 வயது மூதாட்டியை 4 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular