![](https://tamilyugam.in/wp-content/uploads/2025/01/tamil-yugam-news-online-breaking-viral-news-channel-6.jpg)
சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்பது மக்கள் உபயோகிக்கும் அன்றாட பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் வசூலிக்கும் மறைமுக வரியாகும். இந்த சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், 29 மார்ச் 2017 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜூலை 1, 2017 முதல் நடைமுறைக்கு வந்தது. மேலும், அடுத்த ஓரிரு மாதத்தில் மத்திய அரசு 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ள வேளையில் நாட்டின் வரி வசூல் உயர்ந்திருப்பதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி கடந்த ஆண்டு 2024 டிசம்பர் மாதத்தில் ரூ. 1.77 லட்சம் கோடி வரை GST வரி வசூலாகி உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், 2023 ஆண்டு டிசம்பர் மாத GST வசூலுடன் ஒப்பிடுகையில் இந்த வரி வசூலிப்பானது 7.3% அதிகரித்துள்ளதாக நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதை தொடர்ந்து, இந்த வரி வசூல் அதிகரிப்பு இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உதவும் என வருமான வரித்துறை பகுத்தாய்வு தெரிவிக்கிறது.