2025 ஆம் ஆண்டிற்கான ’வைக்கம் விருது’ அமெரிக்க வாழ் இந்தியர்களின் உரிமைக்கு குரல் கொடுத்தவரான தேன்மொழி சௌந்தரராஜனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையை பூர்வீகமாக கொண்ட தேன்மொழி அமெரிக்காவில் உள்ளார். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்கு போராடிய தேன்மொழிக்கு வைக்கம் விருதுடன் ரூ.5 லட்சம், தங்கப் பதக்கம், சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.




