
2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது தமிழக சட்டசபை கூட்டம் வருகின்ற மார்ச் மாதம் 14 ஆம் தேதி நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த கூட்டத்தில் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக பட்ஜெட்டையும், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் வருகிற மார்ச் 17 ஆம் தேதி முதல் இந்த நிதி நிலை அறிக்கையின் விவாதம் தொடங்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், வருகிற ஏப்ரல் மாதம் இறுதி வரை இதுகுறித்து தமிழக சட்டசபை கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்களை கவரும் வண்ணம் புதிய திட்டங்களை கொண்டு வர இதில் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.