
ஐ.பி.எல். 2025: புதிய பொறுப்புடன் மீண்டும் பெங்களூரு அணியில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்..
அடுத்த ஆண்டு IPL தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போதில் இருந்தே அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது RCB அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 17 வருடங்களாக IPL தொடரில் பெங்களூர் அணி விளையாடி வருகிறது. ஆனால் இதுவரை அந்த அணியால் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.