ஐசிசி சார்பாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் T20 உலக கோப்பை தொடர் அடுத்தாக 10வது சீசனை எதிர்நோக்கி உள்ளது. இத்தொடரின் 9வது சீசனானது சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை தன்வசப்படுத்தியது. இந்த நிலையில் 2026 T20 உலக கோப்பை தொடர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 2026 T20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
20 அணிகள் களமிறங்க உள்ள இந்த தொடரின் போட்டிகள் குரூப், சூப்பர் 8, நாக் அவுட் முறையில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. 2024 தொடரின் சாம்பியனான இந்தியா, ரன்னரான தென் அமெரிக்கா, போட்டியை நடத்தும் இலங்கை அணிகளுடன், தொடரில் முன்னிலை வகித்த ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், அமெரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய 9 அணிகளும் 2026 தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன.