
நீலகிரியில் அரசு பள்ளி மாணவிகள் 21 பேருக்கு ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் ஆசிரியரான செந்தில் குமார் (50) பாடம் நடத்தும்போது மாணவிகளை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். குறிப்பாக பாலியல் குறித்த பாடத்தின்போது ஆசிரியரின் நடவடிக்கை தவறாக இருந்ததையடுத்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.