“22,195 பணியிடங்கள்.. இன்று கடைசி நாள்”..!! இந்தியன் ரயில்வேயின் மெகா அறிவிப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

ரயில்வே தேர்வு வாரியம் (RRB) 2026-ஆம் ஆண்டிற்கான குரூப் டி (Group D) பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய ரயில்வே துறையில் மொத்தம் 22,195 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 2-ஆம் தேதி (நாளை) கடைசி நாள் ஆகும். மத்திய அரசுப் பணியில் சேர விரும்பும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு (10th) அல்லது ஐடிஐ (ITI) முடித்திருக்க வேண்டும். வயது வரம்பைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரையிலும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரையிலும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஆரம்ப ஊதியமாக சுமார் ரூ.18,000 முதல் அதிகபட்சமாக ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இது தவிர, ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும் இதர சலுகைகளும் கிடைக்கும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப் பிரிவினருக்கு ரூ.500 மற்றும் எஸ்சி/எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rrbchennai.gov.in மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இன்று கடைசி நாள் என்பதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் காலதாமதமின்றி உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

யாரெல்லாம் கற்றாழையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்..?? இதோ முக்கியமான 5 காரணங்கள்..!!

Read Next

கோபம் படுவதால் ஏற்படும் தீமைகள்.. கோபத்தை எப்படி குறைப்பது..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular