இந்தோனேசியாவை சேர்ந்த தார்மன் (74) என்ற முதியவர், தனக்கு 50 வயது குறைந்த 24 வயது பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதற்காக அவர் சுமார் ரூ.1.8 கோடி வரை பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், திருமணத்துக்கு பிறகு போட்டோகிராபருக்கு பணம் தராமல் மாப்பிள்ளை தப்பியோடி விட்டதாகவும், மணமகளுக்கு அளித்த செக் போலியானது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தார்மன், தாங்கள் இருவரும் தற்போது தேனிலவு பயணத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.




